திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (22:43 IST)

''வேட்டையன்'' ஷூட்டிங்கிற்கு பிரேக் ஏன்? இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங் ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம்  வேட்டையன்.
 
இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.  பிரமாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
 
இப்படத்தின் முதல் மற்றும் 2 வது கட்ட ஷூட்டிங் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் நடைபெற்றது. 3 வது கட்ட  ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த   நிலையில் வேட்டையன் பட ஷூட்டிங்  இடையில் நிறுத்தப்பட்ட நிலையில், இதற்குக்காரணம் லைகா பொருளாதார நெருக்கெடியில் சிக்கியிருந்ததாக தகவல் வெளியானது.
 
ஆனால், அப்படியில்லையாம். ரஜினிதான்  கொஞ்ச நாள் ஷூட்டிங் நிறுத்தும்படி கூறினாராம். அதன்படி, ஷூட்டிங் இடையில்  நிறுத்தப்பட்டு பின் மீண்டும் தொடங்கியதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ஐதராப்பாத்தில் ஷூட்டிங்கிற்கு சென்றுள்ளார் ரஜினி, அங்கு  20  நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடைபெறவுள்ளதாகவும், இதில் 17 நாட்கள் ரஜினி இருப்பார் எனவும், மீதமுள்ள 3 நாட்கள் பேட்ச் ஒர்க் நடைபெறும் என தகவல் வெளியாகிறது.
 
இதனால் இப்படம்  நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில் இப்படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.