சூப்பர் ஸ்டார் ரஜினியின் செயல்....ரசிகர்கள் நெகிழ்ச்சி
வேட்டையன் பட ஷூட்டிங்கிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சலாம். இப்படம் ரசிகர்களின் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதையடுத்து, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் வேட்டையன்.
இப்படத்தை லைகா தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். பிரமாண்டமாகத் தயாராகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, அமிதாப் பச்சன், ரித்திகா சிங், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல் மற்றும் 2 வது கட்ட ஷூட்டிங் கேரளா மற்றும் தமிழ் நாட்டில் நடைபெற்றது. 3 வது கட்ட ஷூட்டிங் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
நேற்று, சென்னை மெரினா கடற்கரையில், கலைஞர் நினைவிடம் திறப்புவிழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த் இன்று ஆந்திராவுக்கு புறப்பட்டு சென்றார்.
விமான நிலையத்தில் ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் ரஜினி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.