1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 3 நவம்பர் 2018 (08:18 IST)

பந்தாடப்படும் பாக்யராஜ்!! தமிழ் சினிமா மவுனம் காப்பது ஏன்?

சர்க்கார் பட விவகாரத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நடிகர் பாக்யராஜுக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் யாரும் ஆதரவு தெரிவிக்காதது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
 
சர்க்கார் பட விவகாரத்தில் ஞாயத்தின் பக்கம் நின்று கதை திருட்டு விவகாரத்தை வெளியே கொண்டு வந்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் சர்கார் கதை விவகாரத்தில் ஈடுபட்டதால் தான் தனிப்பட்ட முறையில் பல அசௌகர்யங்களுக்கு ஆளானதால் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று பாக்யராஜ் அறிவித்தார். ஆனால் சங்க நிர்வாகிகள் அவரின் ராஜினாமாவை ஏற்க மறுத்துவிட்டனர்.
 
இந்நிலையில் பாக்யராஜ் சில கார்ப்ரேட் நிறுவனங்களால் மிரட்டப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 
 
மீடூ போன்ற விவகாரங்களுக்கு கருத்து கூறும் பிரபலங்கள் ஒரு மிகப்பெரிய ஜாம்பாவனான பாக்யராஜை இப்படி பலர் பந்தாடுகிறார்கள். இப்படி இருக்கும் வேளையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்காமல் தமிழ் சினிமா மவுனம் காப்பது பலரை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.