செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (19:58 IST)

இயக்குனர் ஹரியை சூர்யா நிராகரித்தது ஏன் ? வெளியான ரகசியம்!

சூர்யா நடிக்க இருந்த அருவா திரைப்படம் கடைசி நேரத்தில் ட்ராப் ஆனது குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கும் முன்னதாக சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கவுள்ளவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ‘அருவா’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஸ்டுடியோ கிரின் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆனால் சூர்யாவுக்கு இந்த கதை பிடிக்காததால் வேறு கதை கேட்டுள்ளார். ஆனால் மீண்டும் ஹரி சொன்ன கதை பழைய கதை போலவே இருக்கவே, மீண்டும் மீண்டும் நான்கு முறை வாய்ப்பு கொடுத்துள்ளார். ஆனால் ஹரி சொன்ன எந்த கதையும் பிடிக்காததால்தான் அந்த படத்தை வேண்டாம் என நிராகரித்ததாக சொல்லப்படுகிறது.
சூர்யா, அருவா, ராஷி கண்ணா, ஹரி,  surya, aruva, rashi khanna, hari, அருண் விஜய்