1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (23:59 IST)

அதிக படங்களில் ஏன் நடிக்கவில்லை…பிரபல நடிகை ஓபன் டக்

தமிழ் சினிமாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு  வெளியான படம் அருவி. இப்படத்தில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் அதிதி பாலன்.  இப்படத்தின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான விருதுகளும் பெற்றார்.

இப்படத்திற்குப் பின் அதிதிபாலன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை. ஆனால், விஜய்சேதுபதியுடன் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்தார். இந்நிலையில், மலையாள நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் நடிப்பில் உருவாகிவரும் 'ஓல்ட் ஈஸ்  கோல்ட்' படத்தில் அதிதி நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது.

ஏன் அதிகப் படங்களில் நடிக்கவில்லை என்ற கேள்விக்குப் பதிலளித்த அதிதிபாலன், சினிமாவைப் புரிந்துகொள்ள இந்த இடைவெளி தேவையாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.