1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 22 அக்டோபர் 2022 (10:02 IST)

லெஜண்ட் படம் ஓடிடியில் வெளியாகாமல் இருக்கக் காரணம் இவர்தானா?

சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களைக் கவர்ந்த படங்களில் லெஜண்ட் மற்றும் இரவின் நிழல் ஆகியவை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை.

சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இந்த திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இந்த படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ஆனால் இந்த படம் வெளியாகி 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் எந்தவொரு ஓடிடியிலும் வெளியாகவில்லை. இதற்குக் காரணம் லெஜண்ட் சரவணன்தான் என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் எதிர்கொண்டதால், படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டாம் என சரவணன் முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.