1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (15:31 IST)

வெந்து தணிந்தது காடு ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்

சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

சமீபத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரிலீஸ் ஆனது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தின் குறையாக அதிக நேரம் ஓடுவதும், இரண்டாம் பாதியில் ஆமை வேகத்தில் நகர்வதும் சொல்லப்படுகிறது. ஆனாலும் படம் ரிலீஸுக்கு முன்பே கௌதம் மேனன் படம் வேகமெடுக்க நேரம் எடுத்துக் கொள்ளும் என சொல்லியே ரசிகர்களை அதற்கேற்றார்போல தயார் செய்திருந்ததால், நிதானமாக செல்வதை ரசிகர்கள் ஒரு பெரிய குறையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது.

இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை செய்யவில்லை என்றாலும் படக்குழுவினர் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிவருகின்றனர். அதற்குக் காரணம் சேட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகள் மூலம் நல்ல தொகையை லாபமாக தயாரிப்பாளர் பார்த்ததுதான் என்று சொல்கின்றனர்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.