செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (18:51 IST)

நயன்தாரா எதற்கு மூக்குத்தி அம்மன் படத்தில்? ஆர்ஜே பாலாஜி பதில்!

பிகில் படத்தை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா   ரஜினியுடன் 'தர்பார்' படத்திலும் அதன் பின்னர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகி வரும் 'நெற்றிக்கண்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் .மூக்குத்தி அம்மன். என்ற படத்திலும் அவர் நடிக்க இருக்கிறார். 
ஆர்ஜே பாலாஜி நடித்த 'எல்கேஜி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில் தற்போது அவர் 'மூக்குத்தி அம்மன்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதோடு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்க உள்ளார். அவருடன் சேர்ந்து சரவணன் என்பவரும் இந்த படத்தை இயக்க உள்ளார். 
 
இந்நிலையில் தற்போது இன்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடிப்பது குறித்து பேசியுள்ளார்.இந்த படத்தில் நயன்தாரா மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.விஜய்யின்  நண்பன் படத்தில் எப்படி கல்வி குறித்த ஒரு விழிப்புணர்வு பெருகியதோ, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் எப்படி பெண்கள் பாதுகாப்பு குறித்து ஒரு விழிப்புணர்வு வந்ததோ அது போல் இந்த படத்தில் ஒரு முக்கிய கருத்து இருக்கிறது.  அதனை பெரிய அளவில் கொண்டு சேர்க்க நயன்தாரா போன்ற ஒரு நட்சத்திரம் தேவை என்று ஆர்.ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.