செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By

அஜித் படத்தில் நயன்தாரா, ஆனால் ஜோடி இல்லை: புதிய தகவல்

தல அஜித்தின் 60வது திரைப்படமான ’வலிமை’ திரைப்படத்தில் நாயகியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் சமீபத்தில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை தனது காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து சந்தித்ததாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் நயன்தாரா நடிப்பது கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் அவரது சம்பளம் மட்டும் கால்ஷீட் தேதிகள் குறித்த தகவல்களும் படக்குழுவினர்களுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் படக்குழுவினரில் ஒருவர் தெரிவித்த ரகசிய தகவலின்படி ’வலிமை’ திரைப் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பது உண்மைதான் என்றும், ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றும், அஜித்துடன் பணிபுரியும் சக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கேரக்டரில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும், இருவரும் இணைந்து நடத்தும் ஒரு அதிரடி ஆபரேஷன் தான் இந்த படத்தின் கதை என்றும் அவர் தெரிவித்தார் 
 
அஜித் மற்றும் நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்காமல் இருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. மேலும் இருவருக்குமே இந்த படத்தில் ஜோடி இல்லை என்றும் ஒரு செய்தி உலா வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை போகப்போக பார்ப்போம்