திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 28 மார்ச் 2019 (12:33 IST)

"ஐரா" ட்விட்டர் விமர்சனம்!

இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ஐரா படம் இன்று (28ம் தேதி) முதல் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இப்படத்தை  பார்த்த ஆடியன்ஸ் படத்தை பற்றி சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். 
 

 
இப்படத்தில் நயன்தாரா பவானி கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். அந்த நடிப்பு பல காலம் பேசப்படும்.
 

 
ஐரா மிகவும் சுவாரஸ்யமான படம். இயக்குநரின் யோசனை மிகவும் வித்தியாசமாக உள்ளது. யோகிபாபு காமெடி சிறப்பு. நயன்தாராவின் அழகும் , நடிப்பும் வழக்கம் போன்று வேற லெவலில் உள்ளது. 2019ன் ப்ளாக் பஸ்டர் படம் ஐரா. 
 

 
ஐரா கண்டிப்பாக பார்க்கக் கூடிய படம். பிளாஷ்பேக் காட்சிகளில் யோகி பாபுவின் காமெடி அருமை.  நயன்தாரா படத்தை தாங்குகிறார். 

 
நயன்தாராவை தவிர இப்படத்தில் ஒன்றும் இல்லை , படம் லாஜிக்காவும் இல்லை, இதனை பேய் படமென்றே சொல்லமுடியாது என்று இப்படியும் விமர்சனம் எழுந்துள்ளது. 

 
ஐரா நல்ல தொழில்நுட்பங்கள் கொண்ட படம் மற்றும் நடிப்பும் சிறப்பு இருந்தாலும் இந்த படம் எந்தவொரு உற்சாகத்தையும் ஏற்படுத்தாது. 

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்பதை மீண்டும் ஒருமுறை ஐரா படத்தின் மூலம் நிரூபித்துள்ளார். 
 
நயன்தாராவின் நடிப்பு சிறப்பு,  குறிப்பாக  பவானி கதாபாத்திரம் சூப்பர்,  மேக்கப் , எக்ஸ்பிரேசன், அந்த கண்கள் அற்புதம்!