மலையாள படத்திற்கு இசையமைத்தது ஏன்? ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான். இவர, தமிழ், இந்தி, உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில், விக்ரமின் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுககு இசையமைத்து வருகிறார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு மலையான் குஞ்சு என்ற மலையாள படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான். ,இப்படத்தை ஷஜிமோன் இயக்க, பகத்பாசில் நடித்துள்ளார். இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்திற்கு மகேஷ் நாராயணன் கதை எழுதியுள்ளார். இந்த நிலையில் 28 ஆண்டுகளுக்குப் பின் மலையாளத்தில் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்...
அதில், இப்படத்தில் பகத்பாசிலின் கேரக்டர் ரேடியோ மெக்கானிக். அதுதான் என்னை இசையாய்க்க தூண்டியது. என் அம்மா எனக்கு இசையை அறிமுகம் செய்யாமல் போயிருந்தால் நான் ரேடியோ மெக்கானிக் ஆகியிருப்பேன். பகத்பாசிலின் கேரக்டரை உணர்ந்துகொண்டு இப்படத்திற்கு இசையாய்க்க முடிவு செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.