1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 மே 2021 (18:40 IST)

அஜித் விஷ்ணுவர்தனின் அந்த கதையை நிராகரிக்க இதுதான் காரணம்!

அஜித் நடிப்பில் உருவாக இருந்த ஒரு வரலாற்றுக் கதையை அஜித் நிராகரித்து விட்டார் என்பது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே.

அஜித்துக்கு பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய இரு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அவர் அதன் பின்னர் பல படங்களை இயக்கினாலும் எந்த படமும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இப்போது அவர் அஜித்துக்காக எழுத்தாளர் பாலகுமாரனோடு இணைந்து ஒரு வரலாற்றுக் கதையை எழுதி வைத்திருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லையாம்.

இதுகுறித்த தகவல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அந்த கதாபாத்திரத்துக்காக அஜித் சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு மாறி ஒரு வருட காலம் அதை மெயிண்டெய்ன் செய்யவேண்டும் என இயக்குனர் கேட்டுள்ளார. ஆனால் அஜித்துக்கு நிறைய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதால் அப்படி செய்ய முடியாது என்பதால் அந்த கதையை நிராகரித்து விட்டாராம்.