வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (10:21 IST)

ஓணம் வின்னர் யாரு? ஹோம்லி முதல் க்ளாமர் வரை! - நடிகைகளின் ஓணம் Pics!

Onam Pics
ஓணம் வந்தாலே கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருக்க. ஓணம் புடவையில் நடிகைகள் வெளியிடும் போட்டோக்கள்தான் சமூக வலைதளங்களை நிறைத்து வருகிறது.



கேரள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணத்தில் பலரையும் ஈர்க்கும் மற்றொரு அம்சம் வெள்ளை நிறத்திலான ஓணம் புடவை. இந்த ஓணம் புடவையை கட்டி அழகு பார்ப்பதற்காகவே பல பெண்களும் தமிழ்நாட்டிலும் கூட ஓணத்தை ஆனந்தமாக கொண்டாடுகின்றனர். நேற்று ஓணம் பண்டிகை சிறப்பாக நடந்து முடிந்தது.

பல நடிகைகளும் ஓணம் புடவையில் ஹோம்லி முதல் க்ளாமர் வரை பல ரகங்களில் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆனந்த கூத்தாட செய்துள்ளனர். இந்த ஓணம் காஸ்ட்யூம்களில் எந்த நடிகை வின்னர் என சமூக வலைதளத்தில் ஒரு பஞ்சாயத்தே நடந்து வருகிறது.

பெரும்பாலான சமூக வலைதளவாசிகள் நடிகை கீர்த்தி சுரேஷின் ஓணம் புகைப்படத்தை பகிர்ந்து ஓணம் வின்னர் என பகிர்ந்துள்ளனர். கல்யாணி ப்ரியதர்ஷன், நிகிலா விமல், மடோனா செபாஸ்டியன் என பல நடிகைகளின் ஓணம் புகைப்படங்களும் வைரலாகி வந்தன. அவர்களது ரசிகர்களும் ஓணம் வின்னர் இவர்தான் என போட்டி போடுகின்றனர்.
இதற்கு நடுவே 2கே கிட்ஸ் சிலர் தங்கள் ட்ரீம் கேர்ளான அமலா ஷாஜியின் ஓணம் புகைப்படங்களை பகிர்ந்து ஓணம் வின்னர் என அறிவித்து வந்ததும் நடந்தது. இந்த ஓணம் வின்னர் போட்டியால் சமூக வலைதளங்கள் நடிகைகளின் ஓணம் புகைப்படத்தால் நிறைந்துள்ளது.