வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (10:14 IST)

மக்கள் வாழ்வில் இன்பங்கள் நிறைய ஓணம் திருநாள் வழி காட்டட்டும்! டாக்டர் ராமதாஸ் வாழ்த்து..!

ramadoss
மக்களையே தமது சொத்தாக மதித்த மன்னன் மகாபலி மக்களைச் சந்திக்க வரும் திருவோணம் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள மலையாளம் பேசும் மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வாமணனால் பாதாளத்தில் தள்ளப்பட்ட மகாபலி மன்னன் ஆண்டுக்கு ஒருமுறை வெளியே வந்து தமது மக்களைச் சந்திக்கச் செல்லும் நிகழ்வு தான் திருவோணம் திருநாளாக  கொண்டாடப்படுகிறது. மன்னன் மகாபலியின் வருகை மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும். இந்த நாள் மகாபலி  மன்னனை மட்டும் வரவேற்பதற்கான நாள் அல்ல... வாழ்க்கையில் நாம் அனுபவித்து வரும் துன்பங்களை,  விலக்கி இன்பங்களையும் வரவேற்பதற்கான நன்நாள் ஆகும். அந்த வகையில் ஓணத்தை வரவேற்போம்.
 
ஓணம் திருநாள் அன்பை வலியுறுத்துகிறது. மக்கள் மீது மன்னன் கொண்டுள்ள அன்பையும், மன்னன் மீது மக்கள் கொண்டுள்ள நன்றிக்கடனையும் ஓணம் திருநாள் வெளிப்படுத்துகிறது. ஒரு நாடும், அதன் மக்களும் மகிழ்ச்சியாகவும், துன்பங்களைத் தொலைத்து இன்பமாக வாழ்வதற்கான இலக்கணத்தையும் ஓணம் திருநாள் வரையறுத்துள்ளது. அந்த இலக்கணத்தை பின்பற்றினால் வாழ்வில் இன்பமே நிறையும்.
 
ஓணம் திருநாளைக் கொண்டாடும் போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இன்பமும் எல்லா நாட்களும் நீடிக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும் ஆகும். அது நிறைவேறும் வகையில் துன்பங்கள் விலகி இன்பங்கள் நிறையவும், மகிழ்ச்சி, வளம், அமைதி, அன்பு, பாதுகாப்பான எதிர்காலம் உள்ளிட்ட அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும்  ஓணம் திருநாள் வகை செய்ய வேண்டும் என்று கூறி, மலையாள மொழி பேசும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran