திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (19:39 IST)

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேஷன் இருவரில் ஒருவர் தான்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறி கொண்டிருக்கும் நிலையில் கடந்த வாரம் சிம்புவின் அறிமுக வாரம் என்பதால் போட்டியாளர்கள் வெளியேற்றப்படவில்லை
 
 இந்த நிலையில் இந்த வாரம் தாடி பாலாஜி அல்லது சினேகன் ஆகிய இருவரில் ஒருவர் வெளியே வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த வாரம் தாமரை, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, சுருதி, அனிதா, அபிராமி  ஆகிய 7 பேர் நாமினேஷன் ஆகியுள்ள நிலையில் அவர்களில் தாமரை, நிரூப், ஸ்ருதி, அனிதா ஆகியோர் அதிக வாக்குகள் பெற்று பாதுகாப்பாக உள்ளனர் 
இந்த நிலையில் சினேகன், தாடி பாலாஜி, அபிராமி ஆகிய மூவரும் குறைந்த வாக்குகள் பெற்று இருக்க்கும் நிலையில் இவர்களில் தாடி பாலாஜி இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது