1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 28 பிப்ரவரி 2022 (12:53 IST)

சிம்பு படத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாரா? ஆச்சரிய தகவல்

சிம்பு படத்தில் பாலாஜி முருகதாஸ் நடித்துள்ளாரா? ஆச்சரிய தகவல்
சிம்பு நடித்த படத்தில் பாலாஜி முருகதாஸ் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளதாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நேற்று சிம்பு தொகுத்து வழங்கிய நிலையில் ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்தார்
 
அப்போது பாலாஜி முருகதாஸ் சிம்புவிடம்  நீங்கள் நடித்த வல்லவன் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் டான்ஸ் ஆடி உள்ளேன் என்று கூறியுள்ளார்
 
அதைக் கேட்டு ஆச்சரியமடைந்த சிம்பு, என்னுடைய படத்தில் நீங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் என்று வெளியில் சொல்லி என்னுடைய வயது அதிகம் ஆக்காதீர்கள் என்று காமெடியுடன் கூறினார். இந்த உரையாடல் சுவராசியமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது