திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (19:36 IST)

வேதாவாக மாறும் ஷாருக்கான்?

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில், மாதவன் – விஜய் சேதுபதி நடிப்பில் ரிலீஸான படம் ‘விக்ரம் வேதா’. கடந்த வருடம் ரிலீஸான இந்தப் படம், 100 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். சாம் சி.எஸ். இசை அமைத்திருந்தார்.
 
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இந்தப் படத்தைத் தயாரித்தார். தற்போது ஹிந்தியில் இந்தப் படத்தை ரீமேக் செய்ய இருக்கின்றனர். சஷிகாந்தோடு சேர்ந்து ரிலையன்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ப்ளான் சி ஸ்டுடியோஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. புஷ்கர் – காயத்ரியே ஹிந்தியிலும் இயக்குகின்றனர்.
 
இந்நிலையில், விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் விஜய்சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்க போவதாக கூறப்படுகிறது. மேலும், விக்ரம் கதாபாத்திரத்தில் ஹிந்தியிலும் மாதவனே நடிக்க போவதாக பேசப்படுகிறது.