திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : சனி, 1 ஜூலை 2023 (13:18 IST)

வெறித்தனமா இருக்கணும்ல....? 'விடாமுயற்சி'க்காக உடல் எடை குறைத்து மாஸ் லுக்கிற்கு மாறிய அஜித்!

அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்!
 
துணிவு படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் இன்னும் அடுத்த கட்ட பணிகள் நடக்கவில்லை. ஷூட்டிங் எப்போது என்பதும் தெரியவில்லை.
 
இப்படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததால இப்போது பொருளாதார ரீதியாக லைகா நிறுவனம் சில பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இருந்தாலும் படக்குழுவினர் தொடர்ந்து மற்ற வேலைகளை செய்து தான் வருகிறார்கள். அதன்படி இப்படத்திற்காக நடிகர் அஜித் தந்து உடல் எடையை குறைத்து சிக்கென தோற்றத்திற்கு மாறி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோஸ் சமூகவலைத்தளங்களில் பரவி செம வைரலாகி வருகிறது.