வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (10:01 IST)

லியோவில் விஜய்க்கு இன்னும் எத்தனை நாள் ஷூட்டிங்… லோகேஷ் தகவல்!

வாரிசு படத்துக்கு பிறகு தனக்கு மாஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன், அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

காஷ்மீரில் 60 நாட்கள் தங்கி ஷூட்டிங்கை முடித்து வந்த படக்குழு, இப்போது சென்னையில் செட் அமைத்து விறுவிறுப்பாக ஷுட்டிங் நடந்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்துக்காக 2000 டான்ஸர்களோடு பிரம்மாண்டமான பாடல் ஒன்றை படக்குழு படமாக்கியது. இந்த பாடலை விஜய்யே பாடியுள்ளார். இந்த பாடலில் விஜய்யோடு அர்ஜுன், மன்சூர் அலிகான் மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடனமாடியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸாக உள்ளது.

இந்நிலையில் படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் லோகேஷ் “படத்தில் விஜய்க்கு இன்னும் 10 நாட்கள் மட்டும்தான் ஷூட்டிங் உள்ளது. மற்ற நடிகர்களுக்கான காட்சிகள் உள்ளன. விஜய் அண்ணாவை பிரிவதை நினைத்தாலே வருத்தமாக உள்ளது.” என அப்டேட் கொடுத்துள்ளார்.