1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 27 மார்ச் 2019 (15:10 IST)

கெட்டுப்போன ரத்தம் செலுத்திய விவகாரம் : சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ்

கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டு இரு கர்ப்பிணிகள் உயிரிழந்தது குறித்த விவகாரத்தில் பத்திரிக்கை செய்தியின் அடிப்படையில் தாமாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது, சுகாதாரத்துரை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வியக இயக்குநர் அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநரும் 2 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் ஆணையிட்டுள்ளது.
 
தருமபுரி , கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் தவறான ரத்தம் ஏற்றப்பட்டதாக வெளியான விவகாரத்தில் இந்த உத்தரவு மாநில சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் திட்ட இயக்குநர் ஆகிய இருவருக்கும் இருவாரத்தில் பதிலளிக்க வேண்டுமென மனித உரிமைஆணையம் உத்தவிட்டுள்ளது.