1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:26 IST)

என்னப்பா இது! ரஜினிக்கு இப்படி ஒரு சோதனை

தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் சந்தேகமே இல்லாமல்  கையை நீட்டலாம் ரஜினியை நோக்கி... அவருடைய படங்கள் எல்லாம் வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளன.



பேமிலி ஆடியன்ஸ் பார்க்கும் படமாக எப்போதும் ரஜினி படம் இருக்கும். இதனால் ரஜினி படத்தை தயாரிக்க வாய்ப்பு கிடைப்பது தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது. ரஜினி கடைசியாக நடித்த 2.0 மற்றும் பேட்ட படங்களின் வசூலே இதற்கு சாட்சி. இந்நிலையில்  முருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினி  நடிக்க உள்ளது தெரிந்த கதை. இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து லைகா நிறுவனம் பின்வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் பின் வாங்கி விட்டதாம். பெரும் செலவில் ரஜினி படத்தை சிலரால் தான் தயாரிக்க முடியும். அந்த வகையில் ரஜினி படத்தை கலைப்புலி தாணு தான் தயாரிக்க முடியும். ஆனால் அவருக்கு இன்னும் ரஜினி ஓகே சொல்லவில்லை என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.