வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 25 மார்ச் 2024 (23:03 IST)

அந்தக் கேரவன்-ல அப்படி என்ன இருக்கு? அடம் பிடிக்கும் யோகி பாபு

ஷூட்டிங்கின்போது  யோகிபாபு, ஒரு குறிப்பிட்ட கேரவனை காட்டி இந்தக் கேரவன் தான் தனக்கு வேண்டும் என அடப்பிடிப்பதாக கூறப்படுகிறது.

யோகி பாபு தற்போது  விஜய்யின் தி கோட் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில், பொதுவாக நடிகர் படத்தில் நடிப்பது ஒரு விதமாக என்றால் ஷூட்டிங்கின்போது வேறு மாதிரி நடந்துகொள்வதாக கூறப்படுவதுண்டு.
 
இந்த நிலையில், நடிகர் யோகிபாபு ஷூட்டிங்கின்போது நடந்துகொண்டது சர்ச்சையாகியுள்ளது.
 
அதாவது குறிப்பிட்ட படத்தின் ஷூட்டிங்கின்போது அங்கு சென்ற யோகிபாபு, ஒரு குறிப்பிட்ட கேரவனை காட்டி இந்தக் கேரவன் தான் தனக்கு வேண்டும் என அடப்பிடிப்பதாக கூறப்படுகிறது.
 
கேரவன்கள் ரேஞ்சிற்கு ஏற்றபடி வாடகை வசூலிக்கப்படும் நிலையில், யோகி பாபுவிற்கு ரூ.5 ஆயிரம் வாடகையில் கேரன்வன் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டதாம். ஆனால், அதை நிராகரித்த அவர், ஒரு குறிப்பிட்ட கேரவனை காட்டி அதுதான் வேண்டும் என கூறி வற்புறுத்துகிறார் என கூறப்படுகிறது. இந்த கேரவனுக்கு தினமும் ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டுமாம். அதேசமயம் இந்த கேரவனே நடிகர் யோகி பாபுடையது என தகவலும் வெளியாகிறது.