திங்கள், 4 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 16 செப்டம்பர் 2024 (11:14 IST)

குக் வித் கோமாளியில் என்ன நடந்தது! பிரியங்கா vs மணிமேகலை சண்டை! - வெளியானது ஆடியோ!

Priyanka Manimegalai Fight

பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளினியாக இருந்து வந்த மணிமேகலை அதிலிருந்து வெளியேறிய நிலையில் அது தொடர்பான ஆடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

 

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான பார்வையாளர்கள் உள்ளனர். இந்த ஷோவில் பல சீசன்களில் கோமாளியாக செயல்பட்டு வந்த மணிமேகலை, இந்த சீசனில் தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். இதே ஷோவில் சமையல் போட்டியாளராக அதே விஜய் டிவியின் மற்றொரு தொகுப்பாளினியான பிரியங்கா பங்கேற்றுள்ளார்.

 

இருவருக்கும் இடையே அடிக்கடி சிறு மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த வார சீசனின்போது நேரடியாக இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இந்த சண்டை தொலைக்காட்சியில் காட்டப்படவில்லை. ஆனால் அதன் பின்னர் மணிமேகலை தான் குக் வித் கோமாளியை விட்டு விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
 

 

இந்நிலையில் குக் வித் கோமாளி ஷூட்டிங் நடந்த செட்டில் பிரியங்காவும், மணிமேகலையும் சண்டை போட்டுக் கொண்ட ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் தன்னை ஆங்கரிங் செய்ய விடாமல் பிரியங்கா தொல்லை செய்வதாக மணிமேகலை குற்றம் சாட்டுவதும், மணிமேகலையை ஷோவை விட்டு போகும்படி ப்ரியங்கா திட்டுவதும் பதிவாகியுள்ளது. தற்போது இந்த ஆடியோ வெளியாகி குக் வித் கோமாளி பார்வையாளர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

 

Edit by Prasanth.K