வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 15 அக்டோபர் 2020 (08:22 IST)

விஜய்சேதுபதியால் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு சிக்கலா? பரபரப்பு தகவல்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் ’800’ திரைப்படம் காரணமாக தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர் என்று கருதப்படும் முத்தையா முரளிதரன் வாழ்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க கூடாது என விஜய் சேதுபதிக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது 
 
தமிழகத்தில் உள்ள இயக்குனர்களும் பிரபலங்களும் இந்த படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி உள்ளனர். ஆனால் அதையும் மீறி விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ’800’ படத்தில் நடிப்பது விஜய் சேதுபதி உறுதியாக இருந்தாலும் அவர் வில்லனாக நடித்துள்ள தளபதி விஜய்யின்  ‘மாஸ்டர்’ திரைப்படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்யமாட்டோம் எனவும், அதையும் மீறி ரிலீஸ் செய்தால் அடுத்த நாளே பைரஸியில் அந்த படத்தை  வெளியிடுவோம் என்று மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
விஜய் சேதுபதியின் பிடிவாதத்தால் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீட்டுக்கு சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் ‘மாஸ்டர்’ படக்குழுவினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது