1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 27 ஜூலை 2023 (21:53 IST)

மாலத்தீவு சென்ற ரஜினிகாந்துக்கு மேள தாளங்களுடன் வரவேற்பு!

rajinikanath
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாலத்தீவு சென்ற  நிலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்  நெல்சன் இயக்கத்தில் உருவாகிய ’ஜெயிலர்’  படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 3 வது சிங்கில் நேற்று வெளியானது.

இதையடுத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ’லால் சலாம்’ ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார்.  இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள்  நடந்து வருகிறது,
 
rajinikanth

இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் மாலத்தீவு சென்றுள்ளார். அவர் படகின் மூலம் மாலத்தீவு சென்று இறங்கியதும் அங்கு மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஏராளமான நடிகர்கள் நடிகைகள் அங்கு சென்றிருந்தாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்சியடைந்துள்ளனர்.