''வேஷ்டி அணிந்துகொண்டு, ஆபாசமாக நடனம்''....பிரபல நடிகர் மீது கிரிக்கெட் வீரர் குற்றச்சாட்டு
நடிகர் சல்மான் கான் வேஷ்டி அணிந்துகொண்டு, ஆபாசமாக நடனம் ஆடுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது, கிசி கா கிசி கி பாய் ஜான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பர்ஹாத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகை பூஜா ஹெக்டே, ஷெஹ்னாஸ்க் கில், வெங்கடேஷ், பாலக் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக் ஆகும்.
இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில், சல்மான்கான், பூஜா ஹெக்டே உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.
இப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 4 பாடல்கள் வெளியாகி வைரலான நிலையில், ஒரு பாடலில் வேஷ்டி அணிந்துகொண்டு, சல்மான்கான் நடனம் ஆடும் வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து, பாஜக தலைவரும் ஓய்வு பெற்ற தேசிய கிரிக்கெட் வீரருமான லஷ்மண் சிவராமகிருஷ்ணா, சல்மான்கான் வேஷ்டி அணிந்துகொண்டு, ஆபாசமாக நடனம் ஆடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.