1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 9 நவம்பர் 2018 (17:53 IST)

விரைவில் '2.0' படத்தை ரிலீஸ் செய்கிறோம்: கெத்து காட்டும் தமிழ் ராக்கர்ஸ்

விஜய் நடித்த 'சர்கார்' படத்தை ரிலீஸான தினத்தின் மாலையில் ஹெச்.டி. பிரிண்டில் ரிலீஸ் செய்வதாக சவால்விட்ட தமிழ் ராக்கர்ஸ், சொன்னபடியே ரிலீஸ் செய்து அதிர்ச்சி அளித்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் என்னென்னவோ நடவடிக்கை எடுத்தும் தமிழ் ராக்கர்ஸ்தான் சவாலில் ஜெயித்தது.

இந்த நிலையில் 'சர்கார்' படத்தை அடுத்து வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படமான சூப்பர் ஸ்டார் ரஜினியின் '2.0' திரைப்படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதாக தமிழ் ராக்கர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகிரங்கமாக முன்கூட்டியே சவால் விட்டு சொல்லி அடிக்கும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒட்டுமொத்த திரைத்துறை, அரசாங்கம் சேர்ந்தும் கண்டுபிடிக்கவில்லை என்பது துரதிஷ்டமானது என்றே கருதப்படுகிறது.