செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:35 IST)

கண்ணீருடன் விடை தருகிறோம்… குரல் அரசனே உறங்குங்கள் - சிவகார்த்திகேயன் , அனிருத் டுவீட்

இன்று நண்பகலில் எஸ்பிபி காலமானார். இதையொட்டி அவரது ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்...இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள்  #RIPSPBSir  என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில்,  தேசத்தின் குரலாய் ஒலித்தவருக்கு …சோல்ல முடியாத  பெரும் சோகம்….நீங்கள் இந்த இந்த ஸ்டுயோவில் இருந்த நினைவுகள் மறக்க முடியாது. உங்களையும் உங்கள் அன்பையும் மிஸ் செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.