கமலை தூக்கிட்டு இவரை தொகுப்பாளராக போடுங்கள் - ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்!

Papiksha| Last Updated: திங்கள், 16 செப்டம்பர் 2019 (11:14 IST)
பிக்பாஸ் சீசன் 3 ஆரம்பத்திலிருந்தே சுவாரஸ்யமே இல்லாமல் போரிங்காக சென்றுகொண்டிருந்தது. பின்னரே ப்ரீஸ் டாஸ்க் மூலம் தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தது. இதற்கு காரணம் கடுமையான டாஸ்க் எதுவும் கொடுக்காமல் காதல் ட்ராமாவை வைத்தே முழு சீசனையும் ஓட்டிவிட்டனர். 


 
இதனால் பார்வையாளர்கள் அனைவரும் கடந்த இரன்டு சீசன்களை விட இந்த சீசன் படு மொக்கையாக இருக்கிறது என்று கூறி வந்தனர். மேலும் கமல் பங்குபெறும் அந்த இரண்டு நாட்களும் பார்ப்பதற்கு சகிக்கவில்லை. அவர் வெறும் அட்வைஸ் மட்டுமே கூறிவிட்டு எஸ்கேஎப் ஆகிவிடுகிறார் என்றெல்லாம் புலம்பி வந்தனர். 
 
இந்நிலையில் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நாகர்ஜூனாவை தமிழ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். கமலை விட அவர் வெகு சிறப்பாக ஹோஸ்ட் செய்து வருகிறார்.  போட்டியாளர்களை கண்டிப்பது, போட்டியில் விதிகளை மீறினால் அதிரடி ஆக்ஷன் எடுப்பது. என அனைத்திலும் சிறந்து விளங்கி வருகிறார். இதனால் இந்த கடைசி இரண்டு வாரங்களுக்கு மட்டும் கமலை விட்டுவிட்டு நாகர்ஜூனாவை தொகுத்து வழங்க செய்யுங்கள் என விஜய் டிவி க்கு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :