கவினுக்கு அரை விட்ட கமல்...!

Papiksha| Last Updated: சனி, 14 செப்டம்பர் 2019 (15:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சனிக்கிழமைக்கான முதலாவது ப்ரோமோ வீடியோ மிகவும் தாமதமாக சற்றுமுன் வெளிவந்துள்ளது. ப்ரீஸ் டாஸ்க்கின் மூலம் அடி வாங்கி.. திட்டு வாங்கி தன் நிலையை உணர்ந்துகொண்ட போட்டியாளர்களுக்கு கமல் கூறும் அறிவுரை என்ன என்பதை இங்கே பார்க்கலாம். 


 
இந்த ப்ரோமோவில் கமல் மக்களோடு மக்களாக ஆடியன்ஸ்களுடன் அமர்ந்துகொண்டு " பிக்பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு வெளியே உள்ள புகழும், விமர்சனமும் போய் சேராது. ஆனால் அதை அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருப்பவர்கள் அவரது குடும்பத்தார்கள் என்று உறவினர்களுக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.
 
பின்னர் அகம் டிவி வழியே அகத்திற்குள் சென்ற கமல் " சேரனுக்கு ஒரு ரகசிய அறை, கவினுக்கு ஒரு பப்ளிக்கா ஒரு அரை கிடைத்தது ரெண்டும் ரெண்டு விதமான அறைகள் என்று கூறி பங்கமாக கலாய்த்தார். அதற்கு கவின் நல்லாவே புரிஞ்சுது சார் என்று கூறி கண்ணத்தை தடவினார். 


இதில் மேலும் படிக்கவும் :