செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2019 (18:27 IST)

லொஸ்லியா அப்பாவின் குணத்தை பாராட்டிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் கவினுக்கு கமல் சில அறிவுரைகளை வழங்குகிறார். 


 
அதில் " கவின் நீங்க ரொம்ப பதட்டமா இருந்தீங்க, அழுதீங்க, அனால் எனக்கு ரொம்ப பிடிச்சது லொஸ்லியா அப்பா உங்களிடம் நடந்துகொண்ட விதம் தான். உன் மேல் அவர் கோபத்தை காட்டவேயில்லை. அது ஒரு த்ரில்லர் காட்சி போன்றே இருந்தது.  நான் ஒரு அப்பாவாக என்ன செய்திருப்பேனோ அதை விட சிறப்பாக அவர் செய்தார். என்று கூறி லொஸ்லியாவின் அப்பா மரியேஷனை வெகுவாக பாராட்டினார்.  
 
இந்த ப்ரோமோவை கண்ட நெட்டிசன்ஸ் "தன் மகளை காதலித்தவர் என்று கூட பார்க்காமல் கன்னத்திலும் முதுகிலும் தட்டிக் கொடுத்த அன்புள்ள அதிசய அப்பா #losliyafather" என பாராட்டி வருகின்றனர்.