வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 21 செப்டம்பர் 2018 (11:01 IST)

நாம ஜெயிக்கணும்னா! அதிரவைக்கும் ஐஸ்வர்யாவின் ஆட்டம்

நாம ஜெயிக்கனும்னா இந்த உலகத்துல என்ன வேணும்னாலும் பண்ணலாம் இதுதான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் தாரக மந்திரம். 'பிக் பாஸ் சீசன் 2'  95 ஆவது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளது. 
இப்போது வழங்கப்படும் டாஸ்க்குகள் சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும்,  போட்டியாளர்களிடையே ஒற்றுமை, சகிப்புத் தன்மை எப்படியுள்ளது என்பதை  பரிசோதிக்கும் வகையில் டாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகிறது.  கடைசியாக வழங்கப்பட்ட மாவை குறைக்கும் டாஸ்கில் ஐஸ்வர்யா, ஜனனி, விஜயலட்சுமி, பாலாஜி, ரித்விகா ஆகியோர் ஈடுபட்டனர். இதில் கடும் சண்டை நடந்தது.

இன்றைய ப்ரோமோவில் ஐஸ்வர்யா வெறிகொண்டு மாவு வைக்கப்பட்டிருந்த  பெட்டிகளை கீழே தள்ளிவிட்டார். இதை கண்டு ஜனனியும் ஐஸ்வர்யாவின் மாவு பெட்டியை தள்ளிவிட்டார். மற்றவர்களின் மாவு பெட்டிகளளையும் இருவரும்  தள்ளிவிட்டனர். அப்போது ஐஸ்வர்யா 'இப்ப நான் ரூல்சை ப்ரேக் பண்ணப் போறேன், இப்ப என்ன பண்ணணுமோ பண்ணிக்கோ... என்று கடுமையாக பேசுகிறார்.  இவ்வாறு ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.