எப்படி பண்ணீங்க?! கேள்வி கேட்ட விஜயலட்சுமி... அதிரவைத்த ஐஸ்வர்யாவின் பதில்!

VM| Last Updated: புதன், 19 செப்டம்பர் 2018 (14:14 IST)
பிக்பாஸ் தமிழ் 2வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது  இதனால் போட்டி கடுமையாக இருக்கிறது. போட்டியாளர்கள் காதில் கரப்பான்பூச்சிவிடுவது, மூக்கில் மிளகு கஷாயம் ஊற்றவது, உறியடிக்கிறவரின் மீது ஆவேசமாக ஊற்றுவது போல தண்ணீர் ஊற்றுவது போன்ற டாஸ்குகள் அரங்கேறுகின்றன. 
இது போன்ற டாஸ்க்குகள் ஒரு பக்கம் சிறுபிள்ளைத்தனமாகவும் இன்னொருபக்கம் ரணக்கொடூரமாகவும் போய்க்கொண்டு உள்ளது. இதனிடையே இன்றைய பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் டாஸ்கை நிறைவேற்றும் விஷயத்தில் ஐஸ்வர்யா, விஜயலட்சுமி இடையே வாய் தகராறு ஏற்படுகிறது.   
 
இதுவரை செய்த டாஸ்க்குகளை எப்படி செய்தாய் என்று விஜயலட்சுமி, ஐஸ்வர்யாவிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு ஐஸ்வர்யா ஃபர்ஸ்ட் டாஸ்க்கில் இருந்து  எப்படி பண்ணுனேன் என்று கேள்வி கேட்டுவிட்டு, எப்படியோ டாஸ்க் எல்லாத்தையும் செஞ்சுடேன்ல என்கிறார்.  அதற்கு பாலாஜி, ஒருத்தர் முகத்தில் மிளகாய்  பொடி போடுவதை எப்படி ஏற்பது என்று ஆவேசமாக கேட்கிறார். அப்போது ஐஸ்வர்யா பிக்பாஸ் சொல்ற மாதிரி எந்த ஸ்டேட்டர்ஜியும் நான் யூஸ் பண்ணுவேன்  என்று கத்தி பேசுகிறார். தொடர்ந்து நீங்கள் எல்லோரும் என்ன டார்கெட் பண்றீங்க என ஐஸ்வர்யா கோபமாக பேசுகிறார். இவ்வாறு ப்ரோமோவில் உள்ளது. எனவே இன்று பிக்பாஸ் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :