ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 அக்டோபர் 2021 (17:50 IST)

சூர்யாவின் ஜெய் பீம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரயாக சூர்யாவின் ஜெய்பீம் வெளியாக உள்ளது.
 
தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. அந்த வகையில் முன்னதாக சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்த பொன்மகள் வந்தாள், சூரரை போற்று உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது. 
 
அதை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள ஜெய்பீம் திரைப்படமும் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது. வரும் நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் நேரயாக இப்படம் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 
 
படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் 164 நிமிடம் ஓடும் படமாக ஜெய்பீம் உருவாகியுள்ளது.