வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2023 (13:28 IST)

இன்றைக்கு நான் நடிகர் சங்க தலைவரா இருக்க காரணம் விஜயகாந்த்! – நடிகர் நாசர்!

Nasar
மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தி விட்டு பேசியது..



பல லட்சம் ரசிகர்கள் நண்பர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்களோ! அதே மன நிலையில் தான் நானும் இருக்கின்றேன்.

வெளியூரில் படபிடிப்பில் இருந்த எனக்கு இங்கு வந்து சேருவதற்கு ஒன்பது மணிநேரம் ஆகிவிட்டது. அவருடன்   நடித்து, பழகி இருக்கின்றேன். ஆனால் இன்று, என்னை நடிகர் சங்க தலைவர் என்று ஒரு அடையாளம் இருக்கிறது என்றால் அந்த பெருமை அனைத்தும் விஜயகாந்த் சாரையே சாரும். அவர் மட்டும் இதை மீட்டு கொடுக்கவில்லை என்றால் நாங்க எல்லோரும் இப்படி ஒரு மரியாதையோடு இருந்திருக்க முடியாது.

அவரை பற்றி அனைவர்க்கும் தெரியும். அவர் எப்பொழுதும் ஒரு தலைவராக இருந்தது இல்லை. படப்பிடிப்பு தளத்தில் சரிக்கு சமமாக எப்படி பழகுவரோ அப்படி தான் மக்களிடத்திலும் பழகுவார். அவருடைய அனைத்து உணர்ச்சியையும் மக்களுக்காவே செலவிடுவார்.

முக்கியமாக அவரிடம் இருந்த கோவம் பற்றி எல்லோரும் சொல்லுவார்கள். நான் பல நபர்களின் கோவங்களை  பார்த்து இருக்கின்றேன். அவர்கள் கோவம் எல்லாம் சொந்த பிரச்சனைக்காக தான்.

ஆனால் விஜயகாந்த் சார் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோவத்துடன் தான் இருந்து இருக்கிறார்.

கொஞ்சம் பயமாக தான் இருக்கின்றது.. ஏனென்றால் அவர் அமர்ந்த இடத்தில் நான் அமர்ந்து இருக்கின்றேன். அவர் செய்த 100 - ல் ஒரு பகுதியாவது செய்ய வேண்டும் என்ற பயம் இருக்கின்றது.

அவருடைய குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.