செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (15:44 IST)

''பீஸ்ட் ''விஜய் வேண்டுமா? ''பூவே உனக்காக'' விஜய் வேண்டுமா? நெல்சனிடம் கேள்வி எழுப்பிய விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி உலகம் முழவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது.

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் பீஸ்ட் படத் தயாரிப்பு நிறுவனமான  சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.

அதன்படி, சன் டிவிடியில் விஜய்யின் பேட்டி வரும் 10 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
விஜய் நடிப்பில் உருவான போக்கிரி, வேட்டைக்காரன் ஆகிய படத்திற்குப் பிறகு ( 10 ஆண்டுகளுக்குப் பின்)   விஜய் சன் டி வி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த நிகழ்ச்சியின் முன்னோட்ட  வீடியோவில்,  விஜய்,  இயக்குநர் நெல்சனிடம், ''பீஸ்ட் விஜய் வேண்டுமா? அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா என்பதை காலம் தீர்மானிக்கும்… உங்களுக்கு இபோது எந்த விஜய் வேண்டும்' எனக் கேட்டார்.

நீங்கள் புத்தாண்டு தீர்மானங்கள் எடுப்பீர்களா என நெல்சன் விஜய்யின் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு விஜய் என்ன பதில் கூறியிருப்பார் என ரசிகர்கள் 10 ஆம் தேதியை எதிர் நோக்கி  ஆவலுடன் காத்திருக்கின்றனர்.