1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 6 ஏப்ரல் 2022 (10:14 IST)

பீஸ்ட் படத்தின் ரிசர்வேஷன் பற்றிய அப்டேட்டை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பீஸ்ட் படத்தின் முன்பதிவு இன்று முதல் தொடங்குவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நிலையில் நேற்று முன் தினம் மாலை பீஸ்ட் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியானது. இந்த டிரைலருக்கு ரசிகர்களின் பேராதரவு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் பீஸ்ட் படத்தின் ரிசர்வேஷன் தொடங்குவதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது சம்மந்தமாக வெளியான போஸ்டர் இப்போது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.