செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (17:41 IST)

விடுதலைக்கு காத்திருக்கிறேன்…. கீர்த்தி சுரேஷ் டுவீட்… நன்றி கூறிய நடிகர் சூரி !

விஜய்சேதுபதி, சூரி நடிக்கவுள்ள படத்திற்கு முன்னணி நடிகை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து படத்தின் நாயகனாக நடிக்கும் சூரி ‘என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என டிவீட் செய்தார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்கவுள்ள சூரிக்கு  நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:

விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரொம்ப ஆர்வமூட்டுவதாக உள்ளது. என்னால் காத்திருக்க முடியவில்லை; ஆல் தி பெஸ்ட் சூரி அண்ணா…. என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு நடிகர் சூரி,. ரொம்ப நன்றி தங்கச்சி எனப் பதிவிட்டுள்ளார். இந்த டுவீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.