புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 25 மே 2020 (19:56 IST)

அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் திடீரென விலகிய பிரபல நடிகை

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து அதன் பின்னர் திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் விஜே ரம்யா. இவர் டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் பிரபலமானவர் என்பவதும் இவரை ஆயிரக்கணக்கானோர் ஃபாலோ செய்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த கொரோனா விடுமுறையில் உடற்பயிற்சி உள்பட பல்வேறு விதமான வீடியோக்களை அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி கொள்வதாகவும் விரைவில் மீண்டும் சந்திப்போம் என்றும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 
 
மேலும் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது:  "இந்த ஊரடங்கின் கடைசி வாரத்தை மெதுவாக எடுத்துக்கொள்ளப் போகிறேன். உயிரோடு இருப்பதற்காக என் இதயமும் மனமும் பாராட்டை விரும்புகின்றன. இருக்கும் அனைத்துக்காகவும் நன்றி செலுத்தி ஒவ்வொரு தருணத்தையும் முழுமையாக வாழுங்கள். கவலை வேண்டாம். நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஒரு குட்டி இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திக்கிறேன் என் அன்பு மக்களே. அதுவரை உங்கள் உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்"