வெற்றிமாறன் படத்தில் விஜே ரம்யா
வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார் விஜே ரம்யா
பரணிநாதன் எழுத்தில் வெளியான நாவல் ‘தறி’. சமீபத்தில் வெளியான இந்த நாவல், சேலம், கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரியில் நடக்கும் சமூக அவலங்களை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
இந்த நாவல், விரைவில் படமாகிறது. ‘சங்கத்தலைவன்’ என்ற இந்தப் படத்தை, மணிமாறம் இயக்குகிறார். சமுத்திரக்கனி, கருணாஸ், விஜே ரம்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜனவரி 22ஆம் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தை, வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கிறது.