1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 6 டிசம்பர் 2019 (16:08 IST)

பூஜையுடன் துவங்கியது சிவகார்த்திகேயனின் "டாக்டர்" படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மத்தியில் பெரிதாக பேசப்படும் நபராக இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.  கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்த கமர்ஷியல் திரைப்படமான "நம்ம வீட்டு பிள்ளை" ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வெற்றிநடை போட்டது. 
 
அதையடுத்து நடிகர் சிவகார்திகேயன் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் "டாக்டர்" என்ற புது படத்தில் நடிக்கவிருக்கிறார். நெல்சன் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த "கோலமாவு கோகிலா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் என்பது நம் அனைவரும் அறிந்ததே. அந்தப்படத்தை தொடர்ந்து நெல்சன் தனது இரண்டாவது படத்தை சிவகார்த்திகேயனை வைத்து இயக்குகிறார்.   KJR ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.
 
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில்  ப்ரியங்கா மோகன் நடிக்கிறார். இன்று படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.