திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (14:16 IST)

"துக்ளக் தர்பார்" படத்தில்அதிதி ராவ்விற்கு பதிலாக ராஷி கண்ணா ஒப்பந்தம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தை டெல்லிபிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார்.

ஆனால், கொரோனா ஊரடங்கினாள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் அடுத்த படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் "துக்ளக் தர்பார்" படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

இந்நிலையில் தற்ப்போது அதிதி ராவ் ஹைத்ரி ரோலில் கதாநாயகியாக நடிகை ராஷி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்வாடி பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராஷி கண்ணா சமீபத்தில் அதே போன்று பாவாடை தாவணியில் போட்டோ ஷூட் நடத்தி வைரலானது குறிப்பிடத்தக்கது.

7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். 96 புகழ்  கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். அண்மையில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 50 % படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்புகளும் நிறைவடையும் என தகவல்கள் கூறுகிறது.