செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 2 அக்டோபர் 2018 (13:27 IST)

என் தலைக்கு குறிவைப்பார் என்று அவரைக் கண்டு பயந்தேன் : சேவாக் 'ஓபன் டாக்..

இந்திய கிரிக்கெட்டில் அதிரடிக்கு  பெயர் போனவர்களின் பட்டியலில் எப்போதும் முன் நிற்பவர். போட்டிக் களத்தில் அணியின் சார்பில்  முன்வரிசையில் இறங்க வைத்து, எதிரணியின் பந்து வீச்சை துவம்சம்  செய்ய வைத்து அழகு பார்க்கப்பட்டவர்களில் ஒருவர்தான்  முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்.
கிரிக்கெட் சம்பந்தமான ஒரு இணைய தள நிகழ்ச்சியில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான அப்ரிதியுடன் பங்கேற்றரர் சேவாக்.
 
அப்போது இருவரிடமும்  கேட்கப்பட்ட  கேள்விகளுக்கு இருவரும் மனம் திறந்து பதில் அளித்தனர்.
 
அதில் நீங்கள் எந்த பந்து வீச்சாளருக்கு பயப்பட்டீர்கள் என்று சேவாக்கிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவாக் : 'பாகிஸ்தான் அணியின் அதிவேக பந்து வீச்சாளரான சோயிப் அக்தரை கண்டுதான் நான் பயந்திருக்கிறேன் எப்போது பந்தை தலைக்கு வீசுவார். காலுக்கு வீசுவார் என்று ஊகிக்க முடியாது. அவரது பல பந்துகள் எனது ஹெல்மெட்டை பதம் பார்த்துள்ளன. அதேசமயம் அவரது பந்துகளில் ரன் அடித்ததும் எனக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது ' இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
 
அப்ரிதி கூறும் போது, ’நான் பந்து வீசுவதற்கு பயந்த ஒரே வீரர் வீரேந்திர சேவக் தான் என்றார்.’