1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 15 ஜூன் 2017 (13:26 IST)

விவேகம் பட சர்வைவா பாடல் மேக்கிங் டீசர் சாதனை

தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'விவேகம்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த  படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத் பாடல்களின் பணிகளை கிட்டத்தட்ட முடித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

 
விவேகம் படத்தின் 50 வினாடி பாடல் டீசர் நேற்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, 12 மணிக்கு  இப்படத்தின் சர்வைவா என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் வீவ்ஸ் பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீவ்ஸ்களையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்ததுள்ளது.
 
டீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். சர்வைவா! சர்வைவா! என்ற தீம் மியூசிக் கொண்ட சிங்கிள் டிராக்காக வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் முழு வடிவமாக வரும் 19ஆம் தேதி சிங்கிள் பாடலாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.