ரஜினி வீட்டு சுவரில் 'விஸ்வாசம்' போஸ்டர் அஜித் ரசிகர்களின் அட்ராசிட்டி

Last Updated: செவ்வாய், 8 ஜனவரி 2019 (22:08 IST)
இதுவரை ரஜினி என்றால் தலைவர் என்ற மரியாதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் இருந்து வந்தது. ஆனால் தற்போது அஜித் படம் வெளியாகும் அதே தினத்தில் ரஜினி படமும் வெளியாவதால் அஜித் ரசிகர்களின் கோபத்திற்கு ரஜினி ஆளாகியிருக்கின்றார்.

'பேட்ட' திரைப்படம் எதிர்பார்த்த லாபத்தை தராவிட்டாலும் பரவாயில்லை, ரஜினியின் இமேஜை அடித்து நொறுக்க வேண்டும் என்ற திட்டமே இந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு இருக்குமோ என்ற சந்தேகம் தற்போது பல ரஜினி ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனை அவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த சதி தற்போது ஓரளவிற்கு வொர்க் அவுட் ஆகிவிட்டது. ரஜினியை தலைவர் என்று முதலில் கூறி வந்த அஜித் ரசிகர்கள், 'பேட்ட' படத்திற்கு தியேட்டர்கள் அதிகமாக புக் ஆக ஆக, தரக்குறைவாக பேச ஆரம்பித்துவிட்டனர். இதன் உச்சகட்டமாக இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி வீட்டு காம்பவுண்டு சுவற்றிலேயே 'விஸ்வாசம்' போஸ்டரை ஒட்டியுள்ளனர். இதற்கு ரஜினி தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை என்றாலும், ரஜினி ரசிகர்கள் இந்த செய்கையால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :