1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 நவம்பர் 2017 (23:24 IST)

தல அஜித்துக்கு தலையில் விசுவாசத்தை காட்டிய ரசிகர்கள்

தல அஜித் நடிக்கும் 58வது படத்திற்கு 'விசுவாசம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்ததில் இருந்தே தல ரசிகர்கள் படத்தின் டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். அஜித் படத்தின் டைட்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே வெளியாவது இப்போதைக்கு நடந்திராக நிகழ்வு என்பதால் ரசிகர்களுக்கு தலைகால் புரியவில்லை



'விசுவாசம்' பட டைட்டிலை பைக்குகளில் எழுதுவது மட்டுமின்றி போஸ்டர், பேனர் என தூள் கிளப்பி வரும் ரசிகர்கள் இன்று ஒரு படி மேலே போய், தலையில் உள்ள ஹேர்ஸ்டைலில் 'விசுவாசம்' படத்தின் பெயரை பொறித்துள்ளனர். இந்த விசுவாச ஸ்டைல் ஹேர்ஸ்டைல் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அஜித்தின் ரசிகர்கள் மட்டுமின்றி ரசிகைகளும் 'விசுவாசம்' படத்தின் டைட்டிலை பலவிதங்களில் கொண்டாடி வருகின்றனர். பல இளம்பெண்கள் தங்கள் டூவீலரில் 'விசுவாசம்' பெயரை எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.