ஜெயம் ரவிக்காக போலீசிடம் கும்மாங்குத்து வாங்கிய இசையமைப்பாளர்.

Last Updated: திங்கள், 7 ஜனவரி 2019 (16:08 IST)


 
அடங்கமறு படத்தின் வெற்றியை  பற்றி பேசுவதற்காக இப்படக்குழுவினர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பேசிய இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்,  அடங்கமறு படத்தின்  புரமோஷனுக்காக மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு இயக்குனர் என்னை அழைத்து சென்றார். 
 
அங்கு கூடியிருந்த ஏராளமான  ரசிகர்கள் கூட்டத்தை கண்டு நான் திணறிவிட்டேன். இயக்குனர் கார்த்திக் வேகமாக மேடை ஏறிவிட நான் அந்த கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். 
 
அப்போது போலீஸ்காரர் ஒருவர் எனக்கு ஒரு அடி கொடுத்து, தூரமாக செல்லும்படி கூறினார். நான் அடி வாங்குவதை இயக்குனர் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகுதான், அவர் இசை அமைப்பாளர், அவரை மேடைக்கு அனுப்புங்கள் என சொல்லி கூட்டத்திலிருந்து மீட்டார்’ என்றார் சாம். 


இதில் மேலும் படிக்கவும் :