செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 மார்ச் 2020 (07:39 IST)

நடிகர் விசுவுக்கு அஞ்சலி செலுத்த வரமுடியாத மகள்கள் !

நேற்று உயிரிழந்த நடிகர் விசுவின் உடலுக்கு அவரது மகள்கள் அஞ்சலி செலுத்த வரமுடியாத சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாலசந்தரின் படங்களுக்கு கதை வசனம் எழுதி அதன் மூலம் பிரபலமானவர் விசு. அதன் பின்னர் அவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் மற்றும் மணல் கயிறு ஆகிய படங்களின் மூலம் தன்னுடைய முத்திரையைப் பதித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

ஒரு காலத்தில் நடிகராகவும் கலக்கிய அவர் அதன் பின் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த சிறுநீரகப் பிரச்சனைக் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று தகனம் செய்யப்படும் என தெரிகிறது. விசுவின் மூன்று மகள்களும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் பீதி அதிகமாகியுள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து விமானங்கள் இந்தியாவுக்குள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவர்களால் வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.