விஸ்வாசம் அப்டேட்ஸ்: அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவா

Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (12:59 IST)
நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வந்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்தது,  வரும் பொங்கலுக்கு படம் ரிலீஸ்.  
 
நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு செய்தியை விஸ்வாசம் படக்குழு  வெளியிட்டுள்ளது. தல அஜித்தின்  விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து படம் வரும் பொங்கலுக்கு  வெளிவரவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். 
 
வீரம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் இணைந்திருக்கும் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இதில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகிபாபு, ரோபோ சங்கர் மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். 
 
சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். வரும் பொங்கலன்று வெளியாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் , செகண்ட் லுக் போஸ்டர்கள்  கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. 
 
இந்நிலையில், புனேவில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இவை முடிந்துவிட்ட நிலையில், விஸ்வாசம் படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, நடிகர் அஜித் தாடி, மீசையை சேவ் செய்து தனது பழைய லுக்கிற்கு திரும்பியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :