வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (10:39 IST)

ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்… விஷ்ணு விஷாலை புலம்ப விட்ட மூன்று நாயகிகள்!

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப் ஐ ஆர் திரைப்படம் தமிழில் பிப்ரவரி 11 ஆம் தேதி ரிலிஸ் ஆகி வரவேற்பைப் பெற்றது.

விஷ்ணு விஷால் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவான எப்.ஐ.ஆர் திரைப்படம் பிப்ரவரி 11ஆம் தேதி ரிலிஸ் ஆனது. இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்ட விஷ்ணு விஷால் ‘இந்த படத்தில் மூன்று நடிகைகளையும் என்னால் ஒரே மேடையில் வரவழைக்க முடியவில்லை. அவர்கள் வளர்ந்து வரும் கதாநாயகிகள்தான். ஆனால் அந்த விஷயத்தில் ஒரு தயாரிப்பாளராக நான் தோற்றுவிட்டேன்’ என புலம்பியுள்ளார்.

இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரெபா ஜான் மற்றும் ரைசா வில்சன் ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.